நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை.. இந்த 7 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால் ஆபத்தாகிவிடுமாம்!!

Photo of author

By Divya

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை.. இந்த 7 பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால் ஆபத்தாகிவிடுமாம்!!

Divya

கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழ வகை தான் தர்பூசணி.இதில் உள்ள நீர்ச்சத்து கோடை வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

*வைட்டமின் ஏ
*வைட்டமின் பி
*வைட்டமின் சி
*மெக்னீசியம்
*நீர்ச்சத்து
*பொட்டாசியம்
*பீட்டா கரோட்டீன்
*தாதுப்பு

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த தர்பூசணி பழத்தை சிலர் உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

1)சர்க்கரை நோயாளிகள்

தர்பூசணி பழத்தில் அதிகளவு இனிப்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்.அதேபோல் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணி பழத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.

2)வயிற்று பிரச்சனை

தர்பூசணி பழத்தில் இருக்கின்ற அதிக நார்ச்சத்து வயிற்று வலி,வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

3)காய்ச்சல் மற்றும் தொண்டை பிரச்சனை

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியை காய்ச்சல்,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட்டால் பாதிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.

4)குறை இரத்த அழுத்தம்

தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.ஆனால் குறை இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்.

5)செரிமானப் பிரச்சனை

தர்பூசணியில் உள்ள அதிக நீர்ச்சத்து செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.அதிகளவு தர்பூசணி எடுத்துக் கொண்டால் இதயப் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது.

6)உடல் வீக்கம்

தர்ப்பூசணி பழத்தில் இருக்கின்ற அதீத நீர்ச்சத்து கை மற்றும் கால் வீக்கத்தை ஏற்படுத்தும்.உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பவர்கள் தர்பூசணி பழத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.

7)அலர்ஜி

சிலருக்கு தர்பூசணி சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் தர்பூசணி பழத்தை தவிர்க்க வேண்டும்.