சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ!

Photo of author

By Parthipan K

சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ!

Parthipan K

சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ!

தற்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் மேல் தான் அதிக கவனம் உள்ளது. ஏனெனில் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் வெளியில் சென்று வீடு திரும்பிகின்றார்கள் அவர்களின் முகத்தில் மாசு படித்திருக்க அதனை முற்றிலும் தவிர்ப்பதற்காக முதலில் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் மற்றும் குளுமையாகவும் மாறும்.

தர்பூசணியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

சருமத்தில் முதுமைத் தோற்றத்தைத் தரும் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க தர்பூசணி பெரிதும் உதவியாக இருக்கிறது. தர்பூசணி பழத்தை அரைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.