குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுதான் வெஜ் பிரியாணி!!..      

0
121

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுதான் வெஜ் பிரியாணி!!..

 

 

முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள் , பாஸ்மதி அரிசி – 3 கப், காரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, காலிஃப்ளவர் – 3 கப், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 5, முந்திரி – 15, இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி, மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி, டொமேட்டோ கெச்சப் – 2 தேக்கரண்டி, கெட்டியான தயிர் – ஒரு கப், தேங்காய் பால் – ஒரு கப், புதினா + மல்லி இலை – ஒரு கப், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் – தாளிக்க, மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு, நெய் / எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்,செய்முறை,காய்கறிகளை கழுவி ஒரு அங்குல துண்டாக நறுக்கி வைக்கவும். அரிசியை பல முறை அலசி முப்பது நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். வெங்காயத்தை எண்ணெயில்லாமல் வதக்கி ஆற வைக்கவும்.ஆறியதும் அரைத்து வைக்கவும். பச்சை மிளகாய், புதினா, மல்லி இலையை ஒன்றாக அரைத்து வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடனாதும் தாளிக்க கொடுத்துள்ள வாசனை பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பிறகு முந்திரி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும். புதினா விழுது சேர்த்து வதக்கவும்.இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.நன்கு வதங்கியதும் கெச்சப், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து வதக்கவும்.மிளகாய் தூள் வாசம் அடங்கியவுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.ஐந்து நிமிடம் வதக்கி தேங்காய் பால், 3 1/2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.ஒரு கொதி வந்ததும் ஊறிய அரிசியை நன்றாக வடிக்கட்டி சேர்க்கவும். அரிசியை நன்கு வடித்து விட்டு போடவும். தண்ணீர் இருக்கக் கூடாது.வெந்ததும் ரைதாவுடன் பரிமாறவும். சுவையான வெஜ் பிரியாணி தயார்.பிரியாணியை அவரவர் முறைப்படி கடைசியில் தம் போடலாம். மிளகாய் தூள் காஷ்மீரி மிளகாய் தூளாக இருந்தால் கலர் தூக்கலாக இருக்கும். இல்லையென்றால் கடைசியில் ஐந்து குங்குமப் பூ இதழை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும். வாசமாக இருக்கும். அரிசியை சேர்க்கும் போது அரிசி நன்கு ட்ரையாக இருத்தல் மிக அவசியம். முப்பது நிமிடத்திற்கு மேல் அரிசியை ஊற விடக் கூடாது. அரிசியை பல முறை களைந்து அலசுவதால் அதில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் போய் விடும். இந்த பிரியாணி எண்ணெய் குறைவு சுவை அதிகம்.

author avatar
Parthipan K