தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அருவருப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், எல்லா கட்சிகளும் அந்தந்த கட்சிகளின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு போன்றவற்றை முடிவு செய்து இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.
இதில் இந்த வருடம் கோவில்பட்டி சட்டசபை தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிட இருக்கின்றார். அவர் இதற்கு முன்னால் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கே வெற்றிபெற்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார்.
ஆனால் வெற்றி பெற்றதுடன் சரி அதன் பிறகு அந்த தொகுதி பக்கமே டிடிவி தினகரன் போகவில்லை என்று சொல்லப்பட்டது. அப்படி இருக்கையில் சமீபத்தில் தஞ்சை பக்கம் சென்ற டிடிவி தினகரன் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்து எதிர்வரும் சட்டசபை தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று விடலாம் என்று முடிவு செய்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் அவர் தற்சமயம் கோவில்பட்டி தொகுதியை தேர்வு செய்து அங்கே நிற்க இருக்கின்றார். அந்த தொகுதியை பொறுத்தவரையில் அதிமுகவில் அமைச்சர் கடம்பூர் ராஜு களமிறங்கியிருக்கிறார். அவரை எதிர்கொண்டு வெற்றி பெற்றுவிட்டால் நாம் நிச்சயமாக அங்கே நம்முடைய செல்வாக்கை நிலை நிறுத்தி விடலாம் என்பதே டிடிவி தினகரனின் எண்ணமாக இருந்து வருகிறது.
அதே சமயத்தில் சென்றமுறை ஆர் கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, திமுக போன்ற கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தார்கள். ஆகவே இந்த முறை நிச்சயமாக ஆர் கே நகரில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று திமுக முழுமூச்சாக இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள் அதே நேரம் திமுகவைப் பொறுத்தவரையில் கோவில்பட்டி தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே இந்த தொகுதியைப் பற்றி உற்றுநோக்கினால் திமுக பக்கம் பெரிய அளவில் போட்டி இருக்காது. ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரையில் அமைச்சராக இருக்கக்கூடிய கடம்பூர் ராஜு போட்டியிடுவது டிடிவி தினகரனுக்கு சற்று கடினமாக தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனாலும் அதில் கொஞ்சமும் டிடிவி தினகரன் கவலைப்பட்டுவதாக தெரியவில்லை. அவரை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று களம் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள். ஆகவே இந்த முறை கோவில்பட்டி தொகுதி தமிழகத்திலேயே அனைவராலும் உற்று நோக்கப்படும் ஒரு தொகுதியாக மாறியிருக்கிறது.