வயநாடு நிலச்சரிவு 400 உயிர்கள் பலி.. இதெல்லாம் தேசிய பேரிடரே கிடையாது – நிர்மலா சீதாராமன்!!

Photo of author

By Rupa

கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை இழக்க நேரிட்டது. தற்பொழுது வரை மீட்பு படையினர் அந்த பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். யாரும் எதிர்பாராத வகையில் ஜூலை மாதம் இறுதியில் காலை நேரத்தில் இந்த நிலச்சரிவானது ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே கேரளாவில் இதர மலை பிரதேசங்களில் உள்ள மலைகளை காட்டிலும் 11 மீட்டருக்கு அதிகமான மண் இங்கு காணப்படும். அதற்குப் பிறகுதான் பாறைகள் இருக்கும்.

இவ்வாறு அதிக மழை பெய்யும் பொழுது பாறைகள் மேலிருக்கும் மண்ணானது கீழே சரிய ஆரம்பிக்கும். அதேபோல தான் இந்த வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மக்கள் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளக்கூட முடியாமல் ஒரு வினாடியில் அனைத்து உயிர்களும் பறிபோய்விட்டது. கேரள மாநில அரசும் இந்த இழப்பை சரி செய்யும் வரை அந்தப் பகுதியில் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறியுள்ளனர். அது மட்டுமின்றி கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் அப்பகுதி முழுவதும் பெருமளவு சேதமடைந்துள்ளது.

இதனையொட்டி மத்திய அரசு வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை வழுத்தது. இது குறித்து ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவு குறித்து பார்வையிட்டவுடன் இதனை தேசிய பேரிடராக அறிவிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி இன்று பார்வையிட வரும் நேரத்தில் மத்திய அரசிடம் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கட்டாயம் வயநாடு நிலச்சரிவை ஒருபோதும் தேசிய இயற்கை பேரிடராக அறிவிக்க முடியாது.

அதற்கான சட்டமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேற்கொண்டு வேண்டுமானால் மாநில பேரிடராக அறிவிக்கும் பட்சத்தில் உதவி செய்ய முடியும் என தெரிவித்தார். இதேபோல 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலும் இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.