நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

0
67
#image_title

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

*மளிகை சாமான் வாங்கும் போதும், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போகும் போதும் பிள்ளைகளை வீட்டில் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்வது நல்லது. குழந்தைகளை கூட்டி செல்வதால் அவர்கள் நமக்கு தேவை இல்லாத செலவுகளை கொடுத்து விடுவார்கள். அதேபோல் அடம்பிடித்து வாங்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வார்கள். இதனால் அவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கூட்டி செல்வதை தவிர்க்கவும்.

*அதேபோல் குழந்தைகளை ஷாப்பிங் மால், டாய்ஸ்(பொம்மை) கடைகளுக்கு கூட்டி செல்லும் பொழுது விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு பதில் உண்டியல் வாங்கி கொடுங்கள். இப்பொழுது எல்லாம் அழகழகான பொம்மை வடிவில் உண்டியல் வந்துவிட்டது.
பூனை, வீடு, பன்றி என பல வகை உண்டியல் இருக்கிறது.

உண்டியல் வங்கி கொடுப்பதினால் பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கம் உண்டாகும். பணத்தின் அருமை தெரிந்து கொண்டு தேவை இல்லாத செலவை ஏற்படுத்தாமல் இருப்பார்கள்.

*பிள்ளைகளுக்கு எதாவது தேவைப்படுகிறது என்றால் அவர்களின் அப்பா அல்லது அம்மா கடைகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான பொருள் எதுவோ அதை மட்டும் வாங்கி வாருங்கள். ஒருவேளை பிள்ளைகளை கூட்டி சென்றோம் என்றால் அவர்கள் பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கி கொடுக்க சொல்லி அடம் பிடிப்பார்கள். இதனால் நமக்கு தேவை இல்லாத செலவுகள் தான் ஏற்படும்.

*பிள்ளைகள் அடம் பிடிக்கிறார்கள் என்று வெளியில் விற்கப்படும் ஜங்க் புட், பாக்கட்டில் அடைக்கப்பட்டு விறக்கப்டும் ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வாங்கி கொடுத்து பழகாதீர்கள். இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, பணமும் தேவை இல்லாமல் செலவாகும்.

குழந்தைகளுக்கு தனியா வகைகள், நட்ஸ், பழ வகைகளை ஸ்நாக்ஸாக கொடுப்பதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இதன் செலவும் குறைவு தான்.

*பிள்ளைகளுக்கான ஆடைகளை எடுக்கும் பொழுது நாமே தரமான ஆடைகளை செலக்ட் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அவர்களை கடைக்கு கூட்டி சென்றால் அது வேண்டும், இது வேண்டும் என்று ஆடம் பிடிக்க ஆரமித்து விடுவார்கள். இதனால் நமக்கு தேவை இல்லாத செலவுகள் தான் ஏற்படும். நமது சேமிப்பு பணம் இதில் கரைய வாய்ப்பு இருக்கிறது.

*பிள்ளைகளுக்கு நம் குடும்ப சூழ்நிலை, பணத்தின் அருமை, சேமிப்பின் பயன்கள் பற்றி எடுத்து கூற வேண்டும். அவர்களை பணம் சேமிக்க வைக்க ஊக்குவிக்க வேண்டும்.