நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை – கூட்டணி குறித்து கமல்ஹாசன் திட்டவட்டம்!!
திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்க்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்கு திமுக எத்தனை இடங்களை இந்த தேர்தலில் ஒதுக்கும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்தது.
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இதரக் கட்சிகளும் முந்தைய தேர்தலை காட்டிலும் தற்பொழுது அதிக இடங்கள் வேண்டும் என்று எதிர்பார்த்ததோடு யாரும் திமுக சின்னத்தில் நிற்க விரும்பவும் இல்லை.இது அனைத்தும் திமுக-விற்கு பின்னடவையே தருவதாக இருந்தது.
இவ்வாறான சூழலில் திமுக மற்றும் மநீம கூட்டணி குறித்து அரசியல் சுற்றுவட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டது.இருவருக்கும் இடையே கூட்டணி அமைத்து கொள்வது குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் தொடர்ந்து ரகசிய ஆலோசனை செய்து வருவதாக பல தகவல்கள் வெளியானது.
இதர கட்சிகளே கூட்டணியில் தங்களது சின்னத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்று எண்ணிவரும் நிலையில், கமல்ஹாசனும் அதனையே விரும்பினார்.அந்த வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் உடனான இரண்டு கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்தே போனது.
திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சியினரும் தங்களது சின்னத்தில் நின்று போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்ததால் அதற்கு கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளவில்லை.இறுதி கட்டமாக இன்று கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை ஆனது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
அலோசனை முடிவில் கமல்ஹாசன், திமுகவுடன் கூட்டணி வைத்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தற்போது நடக்கும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் 2025 ஆம் ஆண்டு நடைப் பெறப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடமானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.மேற்கொண்டு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிட்டனர்.