2 ஆயிரம் கோடி போதைப்பொருள் வழக்கில் ஜாபர் வுடன் கைகோர்த்த முக்கிய பிரபலங்கள்!! சிஎன்பி வலையில் சிக்கிய வட சென்னை நடிகர்!!

0
182
2000-crore-drug-case-confirmed-connection-with-jafar-sadiq-north-chennai-actor-cnp-officials-released-important-information
2000-crore-drug-case-confirmed-connection-with-jafar-sadiq-north-chennai-actor-cnp-officials-released-important-information

2 ஆயிரம் கோடி போதைப்பொருள் வழக்கில் ஜாபர் வுடன் கைகோர்த்த முக்கிய பிரபலங்கள்!! சிஎன்பி வலையில் சிக்கிய வட சென்னை நடிகர்!!

டெல்லியில் அதிகளவு போதைபொருள் கடத்தப்படுவதாக பல புகார்கள் வெளிவந்தது.அதன் பேரில் சிஎன்பி அதிகாரிகள் செய்த சோதனையில் கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேலான சூடோபெட்ரைன் என்ற போதைப் பொருளானது கைப்பற்றப்பட்டது.இது சம்பந்தமாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.குறிப்பாக இதில் ஜாபர் சாதிக் என்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தான் முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்தது.

இவரைப் பிடித்து விசாரணை செய்ய முற்படும்பொழுது ஜாபர் சாதிக் தலைமறைவானார்.இதனையடுத்து பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு அவரை ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.மேற்கொண்டு சிஎன்பி அதிகாரிகள் இவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.இவர் கிட்டத்தட்ட 3௦௦௦ திற்கும் மேற்பட்ட சூடோபெட்ரெயின் என்ற போதைப்பொருளை பல நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இதில் வரும் வருமானத்தை வைத்து படம் தயாரிப்பு, பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் என பலவற்றில் முதலீடு செய்துள்ளார்.அந்த வகையில் பார்க்கும்பொழுது சினிமா துறையில் பல பிரபலங்கள் இவரது பின்னணியில் இருப்பது வெளிவந்துள்ளது.இது குறித்து இன்று என்சிபி அதிகாரிகள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அமீர் அவர்களுக்கு ஜாபருடன் தொடர்பு உள்ளது உறுதியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அமீர் இது குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது, தற்பொழுது நான் இயக்கி வரும் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் தான். இரு தினங்களாக எந்த ஒரு படைப்பிடிப்பும் நடைபெறவில்லை.இது எதனால் என்பது எனக்கு புரியாமலேயே இருந்தது.ஊடகங்களில் வெளிவரும் செய்தி வைத்துதான் ஜாஃபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியும்.

இது எனக்கு மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது.இவர் மீது வரும் செய்தியானது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல நான் ஒருபோதும் நடிகர்களோட தயாரிப்பாளர்களோடு இணைந்து பணம் சம்பாதிக்க நினைப்பதில்லை.

எப்பொழுதுமே நான் அதற்கு எதிரானவன் தான் என்பது ஊடகத்துறையினர் அனைவரும் அறிந்த ஒன்றே.தற்பொழுது இவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டு வரும் பொழுது இனி இவருடன் நான் தொடரப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று சிஎன்பி அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் இயக்குனர் அமீருக்கு இது இவருடன் தொடர்பு உள்ளது உறுதி எனக் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி பாலிவுட் கோலிவுட் போன்ற பல பிரபலங்களும் பின்னணியில் இருப்பதாகவும் அது குறித்து தகவல்கள் தற்பொழுது வெளியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.மேற்கொண்டு விசாரணையில் பல பிரபலங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாட்ட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

இவர் முன்னாள் திமுக பிரமுகராக இருந்த பட்சத்தில் இவருக்கு பெரும் ஆதரவு அரசியல் வட்டாரத்தில் இருக்குமென்றும் இந்த தேர்தலுக்கு முன்பே அவர்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.