நாங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை – குமாரசாமி பேட்டி!!
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி அவர்கள் நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து இந்த அழைப்பை ஏற்று பல கட்சிகளும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளது. இதற்கு மத்தியில் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அவர்களும் பங்கேற்கவுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அவர்கள் “புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் நானும் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விருப்பமும் இல்லை” என்று கூறினார்.
இதற்கு மத்தியில் காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் இந்த திறப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளது. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி அவர்கள் நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் அடிமைகள் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி “நாங்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு அடிமைகள் கிடையாது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பது எங்கள் கட்சியின் தனிப்பட்ட முடிவு. நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை பின் தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மே 28ம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளின் 7 பிரதிநிதிகள், பாஜக கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகள் என மொத்தம் 25 கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.