இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!!

இப்படி எல்லாம்  மரணம் வருமா? அதிர்ச்சியை எற்படுத்திய நர்ஸிங் மாணவியின் மரணம்!!
மரணம் என்பது பல விதங்களில் மக்களுக்கு வருகின்றது. சிலருக்கு நடக்கும் பொழுது, சிலருக்கு தூங்கும் பொழுது, சிலருக்கு வாகனங்களில் செல்லும் பொழுது என்று பலவிதமான முறைகளில் இறப்பு என்பது மக்களை தாக்குகின்றது. ஆனால் தூத்துக்குடியில் மாணவி ஒருவருக்கு வந்த மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சளி பிடித்தால் ஆவி பிடிப்பது வழக்கமான ஒன்று. ஆவி பிடித்தால் சளி குணமாகும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆவி பிடிக்கும் பொழுது மரணம் வரும் என்பது நமக்கு இந்த செய்தியை படிக்கும் பொழுது அதிர்ச்சியை தருகின்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நர்ஸிங் மாணவி கவுசல்யா வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக சளித் தொந்தரவு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நர்ஸிங் மாணவி கவுசல்யா ஆவி பிடித்துள்ளார். ஆனால் ஆவி பிடிப்பது அவரது மரணத்திற்கு என்று தெரியாமல் ஆவி பிடித்துள்ளார்.
சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்த நர்ஸிங் மாணவி கவுசல்யா இன்று வெந்நீரில் ஆவி பிடிக்கும் மாத்திரையை போட்டு ஆவி பிடித்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட நர்ஸிங் மாணவி கவுசல்யா தனக்கு முன்பு இருந்த வெந்நீர் பாத்திரத்தில் தலை கவிழ்ந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெற்றோர்க்கும் அந்த பகுதி மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.