தமிழகத்தில் இருக்கக்கூடிய 4000 டாஸ்மாக் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் பியர் வகைகளில் விற்பனையானது சமீப காலமாக குறைந்து இருக்கிறது. இதனை ஈடு செய்யும் வகையில் புதிதாக 4 வகை பியர் பாட்டில்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாஸ்மார்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது
இவ்வாறு செய்வதன் மூலம் மது பிரியர்களுக்கு பியர் பாட்டில்களை தேர்வு செய்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கும் என்றும் அவற்றில் முதல் கட்டமாக ஆந்திராவில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிளாக் பஸ்டர் பியரானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலிருந்து கோதுமை பீரான வூட்பெக்கர் இறக்குமதி செய்யப்பட இருப்பதாகவும் இதனோடு கூட மற்ற வகைகளான 2 பியர் வகைகளும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வகை பியர் பாட்டில்களும் மத்திய அரசினுடைய மதுபான ஆலைகளில் இருந்து பெறுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூடுதல் தகவல் தெரிவிக்கிறது.
கடந்தாண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு முதல் வாரத்தில் பியர் விற்பனையானது சரிந்துள்ள நிலையில் இதனை மேம்படுத்துவதற்காக இது போன்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக டாஸ்மார்க் நிறுவனம் திறப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்தாண்டு 10 லட்சம் பியர் பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை 7 லட்சம் பியர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த சரிவின் காரணமாகத்தான் தற்பொழுது புதிய வகைகளாக 4 பியர் பாட்டில்களின் வகைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் இனி வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் இதன் மூலம் பியர் பாட்டில்களில் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக டாஸ்மார்க் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.