நடிகை கஸ்தூரி பிராமண சமுதாயத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய வகையில் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். அவர் அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூராக பேசியது அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டது. புகார்கள் அளிக்கப்பட்டதன் பேரில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதனை தொடர்ந்து அவர் முன் ஜாமின் கேட்டு மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்த அந்த மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மேலும் அவர் மனுவை தள்ளுபடி செய்த பின் அவர் தலைமறைவு ஆனார். அதனை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள பப்புலா பகுதியில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் பங்களா வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. காவல்துறை அதற்கென தனிப்படை அமைத்து கஸ்தூரியை கையும் களவுமாக கைது செய்தனர். அவன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கஸ்தூரியை விசரணனை நடத்தினார்.
மேலும் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதன் பின் அந்த மனு விசாரிக்கப்பட்டு அவருக்கு ஜாமீன் கொடுத்தது எழும்பூர் நீதிமன்றம். மேலும் அவர் கடந்த 4 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன். இரண்டு படம், இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைப்பட்டதோடு மட்டும்மின்றி எனது மகனின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. எனவே போலீஸ் ஸ்டேஷனில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன். திங்கட்கிழமை தான் இது விசாரணைக்கு எடுத்து கொள்ளபட உள்ளது.
இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து ஊடகத்தினர் மற்றும் பொதுமக்களே கேட்கின்றனர். இதிலிருந்து நீங்கள் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம். அரசால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை போலிருக்கிறது என்று அவர் கூறினார்.