ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு சம்மதம் இல்லை! கே எஸ்.அழகிரி!

Photo of author

By Sakthi

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 வருட காலமாக சிறையில் இருந்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தும் தமிழக ஆளுநர் இதுவரையில் அது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது 7 பேர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் தமிழக அரசின் தீர்மானம் மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது என்பதை குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இவ்வாறான சூழலில், முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு எந்த விதமான ஒப்புதலுமில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அழகிரி திமுக எழுதிய கடிதத்திற்கு அவர்கள் ஆதரவு தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலேயே 7 பேர் விடுதலை தொடர்பாக தெரிவித்திருக்கிறார்கள். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆகவே எங்களுடைய கருத்தில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 7 பேர் விடுதலை விவகாரத்தில் முரண்பட்ட விதமாகவே செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.