அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!!

Photo of author

By Parthipan K

அந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!!

இந்தியா, இலங்கை அணிகள் மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இரு அணிகளும் மோதிய 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

அதில், மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இன்று நடைபெறும் இந்த போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதனிடையே போட்டி தொடங்குவதற்கு முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பும்ரா கூறுகையில்,

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தின் அணுகுமுறை தேவை எத்தகையது என்பதில் இன்னும் நாங்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். பீல்டிங்கின் போது பிங்க் பந்து வித்தியாசமாக தோன்றும். நீங்கள் நினைத்ததை விட பந்து வேகமாக கைக்கு வந்து விடும்.

வழக்கமான டெஸ்ட் போட்டியில் காலையில் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் பிற்பகலில் தொடங்குவதால் அந்த சமயத்தில் பந்து பெரிய அளவில் ‘ஸ்விங்’ ஆகாது. ஆனால் மாலைப்பொழுதில் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ய முடியும்.

நாங்கள் அதிகமான பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இதுவரை எதிர்கொண்ட மூன்று பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளையும் வெவ்வேறு விதமான சீதோஷ்ண நிலையில்தான் விளையாடி இருக்கிறோம். எனவே, இதுவரை கிடைத்துள்ள அனுபவங்களை பகிர்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க முயற்சிக்கிறோம் இவ்வாறு கூறினார்.