நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை!

0
84
We got married at the temple! Don't like to live now!
We got married at the temple! Don't like to live now!

நாங்கள் கோவிலில் திருமணம் செய்தோம்! இப்போது வாழ பிடிக்கவில்லை!

முன்பெல்லாம் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்வோம் அது ஆண்களின் உரிமை என காலரை தூக்கி விட்ட காலம் போய், ஆண்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்று சொல்லும் சூழலில் இருந்து தற்போது பெண்கள் அந்த சூழ் நிலைக்கு வந்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் ஒரு புறம் அதிகரித்தாலும், சில பெண்கள் நாங்களும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்றும், அவர்களைப் போல் அவர்களுக்கு நிகராக பல சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.

அப்படி ஒரு பெண் கேரளாவில் செய்துள்ளார். கேரளா மாநிலத்தில், பலபுவக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினரில், மனைவிக்கு கணவனுடன் வாழ விருப்பமில்லாத காரணத்தினால் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கணவனுக்கு பான்பராக் போடுவதும், குடி பழக்கமும், இருந்துள்ளது. இந்நிலையில் அந்த மனைவிக்கு ஆன்லைன் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த நபர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர். முதலில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இருவருக்குள்ளும் கள்ள காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் தன் கணவனிற்கு தெரியாமல் தன் கள்ளக்காதலனுடன் மனைவி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.

இந்த விஷயம் தெரிந்த அந்த குடிகார கணவன் மனைவியின் செல்போனை பிடுங்கி, சிம் கார்டை உடைத்து, மனைவியையும் திட்டி உள்ளார். இந்நிலையில் இந்த ஜோடி ஊரை விட்டு போக முடிவு செய்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு காலைக்கடனுக்காக எழுந்ததாக கூறி காதலுடன் செல்ல நினைத்த அவர் தன்னிடம் போன் இல்லாத காரணத்தினால், கணவரின் போனை எடுத்து சென்று விட்டார்.

காலையில் எழுந்து பார்த்த கணவனுக்கோ பயங்கர அதிர்ச்சி. மேலும் இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அந்த கணவனின் மொபைல் எண்ணைக் கொண்டு, ட்ராக் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள்ளாக அந்த ஜோடி ராமாபுரம் காவல் நிலையத்திற்கு சென்று சேர்ந்தனர்.

அப்போது மனைவி தன் கணவனை ரோட்டோர கோவிலில் திருமணம் செய்ததாகவும், அவருக்கு இருக்கும் கெட்ட பழக்கங்கள் காரணமாக  அவருடன் தனக்கு வாழ விருப்பம் இல்லை என கூறி உள்ளார்.