நமக்கு இது அவசியம்! பழமொழியுடன் பரபரப்பு குறையாத பேச்சு!

Photo of author

By Hasini

நமக்கு இது அவசியம்! பழமொழியுடன் பரபரப்பு குறையாத பேச்சு!

Hasini

We need this! Exciting talk with proverbs!

நமக்கு இது அவசியம்! பழமொழியுடன் பரபரப்பு குறையாத பேச்சு!

சென்னை ராமாபுரத்தில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் இவ்வாறு பேசினார். பல நெருக்கடிகள் என்னை பல்வேறு விதங்களில் சூழ்ந்த போதும் கூட நான் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு தான் சென்றேன். தேர்தலில் இருந்து நான் ஒதுங்கி இருந்தது ஏன் என்று அதிமுகவினருக்கு நன்றாக தெரியும்.

அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் பொறுப்பு என்றும், மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய இந்த நேரத்தில் தவறாமல் அதை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். என்னால் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நமக்கு இந்த நேரத்தில் தேவை ஒற்றுமை ஒன்று தான். நீரடித்து நீர் விலகாது.

மக்கள் நலனிலும், தொண்டர்கள் நலனிலும் யாராக இருந்தாலும் அக்கறை காட்ட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்றும், நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், அதன் காரணமாகவே அதிமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார்.