நாம் தமிழர் கட்சியினர் தூக்கிட்டு தற்கொலை! 3 மணியிலிருந்து 7 மணிக்குள் நடந்தது என்ன?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்க நெப்பந்தூரில் இயங்கி வருவது தான் ஆர்.கே.பி செங்கல் சூலை.இந்த செங்கல் சூளையை வல மாநில தொழிலதிபர் வைத்துள்ளார்.இந்நிறுவனத்தில் சீனிவாசன் என்பவர் கூலித்தொழிலாளராக பணியாற்றி வருகிறறார்.இவர் நாம் தமிழர் கட்சியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி இவர் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.இவர் ஊதியத்தை சற்று அதிகபடுத்தி தருமாறு போராட்டம் நடத்தியுள்ளார்.ஆனால் தொழிலதிபர் ஊதியத்தை ஏற்றி கொடுக்காமல் வட மாநில நபர்களை பணி அமர்த்திவிட்டார்.
அதன்பின் வெளி மாநில ஊழியர்களை வெளியேற்ற சொல்லியும் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.இவ்வாறு தொடர் போராட்டங்களை மேற்கொண்டதால் சமாதனம் பேசுவதற்காக தொழில் நிர்வாகத்தினர் சீனிவாசனை தொலைப்பேசியில் அழைத்து விடியற்காலை 3 மணிக்கு சேம்பருக்கு வரும்படி கூறியுள்ளனர்.அதன்பின் யாருக்கும் என்ன நடந்தது தெரியவில்லை.3 மணிக்கு சென்றவர் 7 மணிக்கு தூக்கில் தொங்கியுள்ளார்.இதுகுறித்து சீனிவாசன் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரது மகள் மற்றும் மனைவி ஆகிய இருவரும் கதறியபடியே தூக்கில் தொங்கியதை பார்த்தனர்.
10 மணி நேரம் போரட்டத்திற்கு பிறகு அவரது உடலை தூக்கு கையிரிளிருந்து இறக்கினர்.அனைவரும் அந்த தொழிலதிபர் மேல் குற்றம் சாட்டி வருகின்றனர்.ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.அதுமட்டுமின்றி தற்கொலை செய்ய தூண்டியதாக அத்தொழிலதிபர் மற்றும் அவரது மகனை கைது செய்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியினர் சீனிவாசனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதுமட்டுமின்றி இதுவரை அந்த தொழிற்சாலையில் இவருடன் சேர்ந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இது கொலையா?தற்கொலையா?என மர்மமாகவே உள்ளது.