எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீட் தேர்விற்கு ஆதரவு அளிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தற்பொழுது அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக முழுவதுமாக புறக்கணித்த நிலையில் நீட் தேர்வு காரணமாக 2021 ஆம் ஆண்டிலிருந்து உயிரிழந்த 22 மாணவர்களுக்கு வருகிற 19ஆம் தேதி மாணவரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பு :-
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நீட் நுழைவு தேர்விற்கான விலக்கு வழங்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் இதுவரை 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் களில் அனுப்பப்பட்ட 2 ஆவது ஒப்புதலில் குறிப்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என சுமார் 1 கோடி பேரிடம் நீட் தேர்வு வேண்டாம் என்பதற்காக கையெழுத்து பெறப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அதனையும் குடியரசு தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என மூன்றாவது கட்டமாக தீர்வு காண சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டமானது ஏப்ரல் 9 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு பெறவே முடியாது என்ற காரணத்தால் தான் அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்ததாகவும் 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு அதிமுக மாணவரணி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் அது சரியாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மாலை 6 மணி அளவில் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.