பலவீனம் உடல் சோர்வு கை கால் வலி இடுப்பு வலி அனைத்தும் நீக்கும் அற்புத வழி!
பெரும்பாலானோருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை உடல் வலி. பொதுவாக இந்த உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ சந்திக்க நேரிடும்.
தலை வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தசை வலி, இடுப்பு வலி, கை கால் வலி, போன்றவை பொதுவானவை.
உடல் பலவீனம், சோர்வு, உடல் வலி அனைத்தும் நீக்கும் அற்புத வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.
இதற்கு தேவையானவை:
1. கொண்டைக்கடலை
2. பச்சை நிலக்கடலை
3. காய்ந்த உலர் திராட்சை
முதல் நாள் இரவில் தூங்க செல்லும் முன்பு ஒரு கப்பில் 2 ஸ்பூன் கொண்டைக்கடலை, 2 ஸ்பூன் நிலக்கடலை, 20 உலர் திராட்சைகளை சேர்த்து இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.
காலையில் அவை நன்றாக ஊறி இருக்கும். அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு அதை அப்படியே சாப்பிட வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான சூட்டில் ஒரு டம்ளர் பாலை குடிக்க வேண்டும். பால் பிடிக்காதவர்கள் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம்.
இதனால் உங்கள் உடல் சோர்வெல்லாம் நீங்கி சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக மாறுவீர்கள். பலவீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வரும். இடுப்பு வலி மூட்டு வலி குறைய ஆரம்பிக்கும். இதை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் இல்லை.