எலும்பு ஜாயின்டில் உள்ள தேய்மானம் 15 நாட்களில் சரியாக.. இந்த கஞ்சி குடிங்க!!

Photo of author

By Divya

நம் உடலில் உள்ள எலும்புகளில் கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இவை தான் நம் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் சில ஊட்டச்சத்து குறைபாட்டால் எலும்பு வலி,எலும்பு தேய்மானம்,எலும்பு முறிவு போன்றவை உண்டாகிறது.

எலும்புகளின் ஜாயின்டில் தேய்மானம் ஏற்பட்டால் குறைவான வயதிலேயே மூட்டு வலி,கை கால் வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே எலும்பு தேய்மானம் ஆவதை தடுக்க கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

1)பச்சரிசி – இரண்டு தேக்கரண்டி
2)புழுங்கல் அரிசி – இரண்டு தேக்கரண்டி
3)பச்சை பயறு – ஒரு தேக்கரண்டி
4)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

படி 01:

முதலில் பச்சரிசி இரண்டு தேக்கரண்டி,புழுங்கல் அரிசி இரண்டு தேக்கரண்டி,பச்சை பயறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

படி 02:

பிறகு இந்த மூன்று பொருட்களையும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

படி 03:

அதன் பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து வறுத்த பொருட்களை போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவிடவும்.

படி 04:

அடுத்ததாக மிக்சர் ஜாரை எடுத்து ஊறவைத்த அரிசி,பச்சை பயறு மற்றும் புழுங்கல் அரிசியை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

படி 05:

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்ததாக அரைத்த பேஸ்டை அதில் போட்டு கஞ்சி பதத்திற்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

படி 06:

பிறகு இதில் உப்பு சேர்த்து பருகி வந்தால் எலும்புகளின் ஜாயின்டில் ஏற்பட்ட தேய்மான பாதிப்பு குணமாகும்.இந்த கஞ்சி செய்முறையில் பிரண்டை பொடி சேர்த்துக் கொண்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.