சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!!

0
242
Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!
Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதீத இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.05.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

05.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 7, கிண்ணக்கொரை (நீலகிரி) 6, குந்தா பாலம் (நீலகிரி), கெத்தை (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 5, கொடவாசல் (திருவாரூர்), மன்னார்குடி (திருவாரூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), திருச்சுழி (விருதுநகர்), தேக்கடி (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 4, ஆழியாறு (கோயம்புத்தூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), ஹரிசன் லிமிடெட் (நீலகிரி), எறையூர் (பெரம்பலூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தருமபுரி PTO, சோலையாறு (கோயம்புத்தூர்), TNAU கோயம்புத்தூர், கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 3, விருதுநகர் AWS, விருத்தாசலம் KVK AWS (கடலூர்), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்),

பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), வலங்கைமான் (திருவாரூர்), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), பொன்மலை (திருச்சி), மிமிசல் (புதுக்கோட்டை), எமரலாடு (நீலகிரி), திருச்சி விமான நிலையம், திருவாரூர்,

பார்வூட் (நீலகிரி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சிவகாசி (விருதுநகர்), கோயம்புத்தூர் விமான நிலையம், பெரியார் (தேனி) தலா 2, செஞ்சி (விழுப்புரம்), அமராவதி அணை (திருப்பூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), எட்டயபுரம் (தூத்துக்குடி), அரியலூர், மேல் கூடலூர் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பாப்பாரப்பட்டி KVK AWS (தருமபுரி), கூடலூர் பஜார் (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), மருங்காபுரி (திருச்சி), திருச்சி நகரம் (திருச்சி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), கீழச்செருவை (தஞ்சாவூர்), தீர்த்தாண்டானம் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்),

இளையங்குடி (சிவகங்கை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் பரமத்தி (கரூர்), மயிலாடுதுறை, கரூர், செம்பனார்கோயில் (மயிலாடுதுறை), கோவில்பட்டி (திருச்சி), திருமயம் (புதுக்கோட்டை), வட்டானம் (ராமநாதபுரம்), சுத்தமல்லி அணை (அரியலூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் வட ஆந்திரகடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Previous articleஅரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Next articleமோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் பல கோடி மோசடி!! திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு!!