சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

Photo of author

By Savitha

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும்,
வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும்,

03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

04.05.2023 மற்றும் 05.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

06.05.2023 மற்றும் 07.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

05.05.2023 முதல் 07.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சின்கோனா (கோயம்புத்தூர்) 11, கடம்பூர் (தூத்துக்குடி), கழுகுமலை (தூத்துக்குடி) 10, எலந்தகுட்டை மேடு (ஈரோடு), மணியாச்சி (தூத்துக்குடி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), தாளவாடி (ஈரோடு) தலா 9, பாளையம்கோட்டை திருநெல்வேலி), பவானிசாகர் (ஈரோடு) தலா 8, தாலுகா அலுவலகம், பந்தலூர் (நீலகிரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), கொடிவேரி (ஈரோடு), மதுரை தெற்கு (மதுரை), PWD மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), போதனூர் ரயில் நிலையம் கோயம்புத்தூர்),

குழித்துறை (கன்னியாகுமரி), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 7, பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), நம்பியூர் (ஈரோடு), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 6, பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), அவினாசி (திருப்பூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கயத்தாறு (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 5, மேட்டுப்பட்டி (மதுரை), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சோலையாறு (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி),

பெரியார் (தேனி), பெரியகுளம் (தேனி), ஆய்க்குடி (தென்காசி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்), நத்தம் (திண்டுக்கல்), திருநெல்வேலி, தலா 4, தக்கலை (கன்னியாகுமரி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பெரியபட்டி (மதுரை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருப்புவனம் (சிவகங்கை), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), சிவகாசி (விருதுநகர்), அன்னூர் (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), கல்லிக்குடி (மதுரை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), சோத்துப்பாறை (தேனி), தொண்டி (ராமநாதபுரம்), விருதுநகர், கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி),

சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), கல்லாந்திரி (மதுரை), தல்லாகுளம் (மதுரை), வைகை அணை (தேனி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 3, முத்துப்பேட்டை (திருவாரூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), மானாமதுரை (சிவகங்கை), மயிலாடி (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), திருவாரூர், மண்டபம் (இராமநாதபுரம்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), சூலூர் (கோயம்புத்தூர்), ஊத்து (திருநெல்வேலி), சங்கரன்கோவில் (தென்காசி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), மாஞ்சோலை (திருநெல்வேலி), கொட்டாரம் (கன்னியாகுமரி), ராஜபாளையம் (விருதுநகர்), நடுவட்டம் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி),

பார்வூட் (நீலகிரி), அடையாமடை (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), திருமானூர் (அரியலூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), மஞ்சளாறு (தேனி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ஈரோடு தலா 2, உதகமண்டலம் (நீலகிரி), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கடல்குடி (தூத்துக்குடி), வி.களத்தூர் (பெரம்பலூர்), மேலூர் (மதுரை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சிவகிரி (தென்காசி), கோயம்புத்தூர் தெற்கு, சேர்வலர் அணை (திருநெல்வேலி),

கன்னியாகுமரி, ஆணைக்கிடங்கு (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (தேனி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), களக்காடு (திருநெல்வேலி), டிஜிபி அலுவலகம் (சென்னை), நாங்குநேரி (திருநெல்வேலி), பள்ளமொர்குளம் (ராமநாதபுரம்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), சாத்தூர் (விருதுநகர்), கடனா அணை (தென்காசி), போடிநாயக்கனூர் (தேனி), சென்னை நுங்கம்பாக்கம், சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), வைப்பார் (தூத்துக்குடி), உடையாளிப்பட்டி (புதுக்கோட்டை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி),

மேல் பவானி (நீலகிரி), நம்பியார் அணை (திருநெல்வேலி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கிளென்மோர்கன் (நீலகிரி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), மேல் கூடலூர் (நீலகிரி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), விருதுநகர் AWS (விருதுநகர்), சிற்றாறு (கன்னியாகுமரி), ஒகேனக்கல் (தருமபுரி), புலிப்பட்டி (மதுரை), கிளச்செருவை (கடலூர்), பீளமேடு (கோயம்புத்தூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), கல்லட்டி (நீலகிரி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பெரியகுளம் AWS (தேனி), கெட்டி (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), கிண்ணக்கொரை (நீலகிரி), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

03.05.2023: தெற்கு ஆந்திரா – தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06.05.2023: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.