ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்ய இணைய முகப்பு – அமைச்சர் அறிவிப்பு

0
184

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்ய இணைய முகப்பு – அமைச்சர் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இணைய முகப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கால்நடைத்துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு காளைகளை துன்புறுத்தாமல் மின்னணு முறையில் அடையாளம் கண்டு அவற்றை பதிவு செய்யவும், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ஆன்லைன் அமைப்பு மூலம் பதிவு செய்யவும்,அனுமதி அளிக்கவும் 87 லட்சம் செலவில் இணைய முகப்பு உருவாக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், பொதுமக்கள் இடையே உள்நாட்டு நாய் இனங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்நாட்டு நாய் இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பி பாறை மற்றும் கோம்பை ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக 5.95 கோடி செலவில் சென்னையில் உள்ள நாய் இனப்பெருக்க மற்றும் பாதுகாப்பு மையம் விரிவாக்கப்படும் எனவும்,

ஊராட்சி ஒன்றிய கால்நடை மருந்தகங்களுக்கு 20 கோடி செலவில் 50 கையடக்க நுண்ணலை நுண்ணாய்வு எக்ஸ்ரே கதிர்வீச்சு கருவிகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

Previous articleவடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ! யூடியூபர் மனீஷ் காஷ்யப்பிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு
Next articleபள்ளிக்கரணையில் மாநகர பஸ் ஏறியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு