பள்ளிக்கரணையில் மாநகர பஸ் ஏறியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

0
95
Dead
Dead

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் ஏறியதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7வது தெரு விஜய் அவென்யூவை சேர்ந்தவர் ஜெய் சுந்தர்(48). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ராமாபுரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் அலுவலகத்திற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் சாலை வழியாக வேளச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தார். பள்ளிக்கரணை சிவன் கோயில் அருகே செல்லும் போது  சாலையின் நடுவே சென்ற பசுமாடு மீது எதிர்பாராத விதமாக மோதி நிலை தடுமாறி  சாலையில்  
விழுந்தார். 

அப்பொழுது பின்னால் வந்த மாநகர பேருந்து அவர் தலை மீது ஏறி இறங்கியது. இதில்  தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெய் சுந்தர் இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார், சப் இன்ஸ்பெக்டர் மேக்சி டிசோசா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெய்சங்கர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாநகர பேருந்து டிரைவர் சேலையூர் ராஜாஜி நகர் 3வது தெருவை சேர்ந்த தனசேகர்(50)என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.