வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

0
329
#image_title

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

போன் மூலம் கஞ்சா பிசினஸ் செய்த வரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

சென்னையில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட லோகநாதன் தெருவில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் அங்கு வந்து கஞ்சா பொட்டலங்களை ஆசாமி ஒருவர் விற்க தொடங்கினார். ஒரு பொட்டலம் 50 ரூபாய் விலை  என்று மாறு வேடத்தில் நின்ற போலீசாருக்கும்  சொன்னார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

அவரிடம் இருந்து சுமார் 3.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே பகுதியை சார்ந்தவரான அவரின் பெயர் யாசர் அராபத் வயது 36. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்த பொழுது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. போனில் உள்ள வாட்ஸ் அப் மூலம் கஞ்சா கேட்டு அவருக்கு தகவல் வருமாம். அதன் அடிப்படையில் அவர் ஸ்கூட்டரில் சென்று கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வாராம். கஞ்சா பொட்டலங்களை சரியான முறையில் எடை பார்த்து பொட்டலம் போட அவரிடம் எடை மெஷின் ஒன்றும் உள்ளதாம்.

அவர் மீது ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எடை மெஷினையும், ஸ்கூட்டரையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Previous articleசிலுவை பாடுகளைக் கூறும் தவக்காலம் தொடங்கியது! சாம்பல் புதனுடன் இன்று வழிபாடு! 
Next articleபணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!