Breaking: இனி வாரத்தின் ஏழு நாட்களிலும் கோயில் மற்றும் கடற்கரைக்கு செல்ல அனுமதி.!!

Photo of author

By Vijay

தமிழகத்தில் கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இனி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் கோவிலுக்கு செல்லவும், ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள், பெரிய நிகழ்ச்சிகள் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தடைகள் தொடர்கிறது. மேலும், மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரி அங்கன்வாடி மையம் முழுமையாக செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்களுக்கு கோயில்களை திறக்க பாஜக போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.