PCOS பிரச்சனையால் உடல் எடை கூடிவிட்டதா? ஒரு மாதத்தில் எதிர்பார்த்த வெயிட் குறைய.. டயட் பிளானை இப்படி செட் பண்ணுங்க!!

Photo of author

By Divya

PCOS பிரச்சனையால் உடல் எடை கூடிவிட்டதா? ஒரு மாதத்தில் எதிர்பார்த்த வெயிட் குறைய.. டயட் பிளானை இப்படி செட் பண்ணுங்க!!

Divya

Polycystic Ovary Syndrome: தற்பொழுது பெரும்பாலான பெண்கள் PCOD பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம் தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

PCOS காரணங்கள்:

1)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
2)ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்
3)ஆரோக்கியம் இல்லா வாழ்க்கை முறை

PCOS அறிகுறிகள்:

1)முடி உதிர்வு
2)உடல் எடை அதிகரிப்பு
3)மலட்டு தன்மை
4)மாதவிடாய் கோளாறு
5)இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்
6)செரிமானப் பிரச்சனை
7)மனச் சோர்வு
8)மன அழுத்தம்
9)முகப்பரு

யாருக்கு PCOS வர வாய்ப்பிருக்கிறது?

1)டைப் 2 நீரிழிவு நோய்
2)உயர் இரத்த அழுத்தம்
3)இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பு
4)எண்டோமெட்ரியல் கேன்சர்
5)உடல் பருமன்

PCOS பிரச்சனை இருபவர்கள் உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டயட் முறையை பின்பற்றலாம்.

1)காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊறவைத்த நீர் பருகி வந்தால் உடல் எடையில் பெருமளவு மாற்றம் ஏற்படும்.

2)தினமும் காலை மாலை இஞ்சி தேநீர் பருகி வந்தால் உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.

3)தினமும் ஒரு கீற்று பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதோடு சீரற்ற மாதவிடாய் சரியாகும்.

4)இலவங்கப்பட்டை பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

5)தினமும் காலையில் ஊறவைத்த பச்சைப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் குறைந்துவிடும்.

6)சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்த்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

7)எண்ணையில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

8)உடலில் உள்ள கொழுப்பை கரைக்க சோள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.சோள உணவுகள் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற உதவுகிறது.மூலிகை பானம் பருகி வந்தால் உடல் எடையில் மாற்றம் காணலாம்.