WEIGHT LOSS TIPS: 30 நாளில் 3 கிலோ எடை குறைய தினமும் இரண்டு முறை மட்டும் இதை செய்யுங்கள்!!
இன்று உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளே அதிகளவு உள்ளது.இங்கு ஆரோக்கிய உணவு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் எவ்வித சத்துக்களும் இல்லாதவையாக இருப்பதினால் அவை இளம் வயதில் உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டு பண்ணி விடுகிறது.இதில் உடல் பருமன் என்பது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது.எனவே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றவும்.
டிப் 01:-
வெந்தயம்,சீரகம் மற்றும் ஓமம் ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி தினமும் இருவேளை குடித்து வந்தால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக காட்சி தரும்.
டிப் 02:-
தினமும் டீ,காபி குடிக்காமல் க்ரீன் டீ,லெமன் கிராஸ் டீ போட்டு குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.
டிப் 03:-
ஒரு கப் வாழைத்தண்டு மற்றும் ஒரு பெரிய நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.
டிப் 04:-
ஆவாரம் பூ மற்றும் செம்பருத்தி பூவை நன்கு உலர்த்தி பொடி செய்து கசாயம் வைத்து குடித்து வந்தால் உடலில் படிந்து கிடக்கும் கொழுப்புகள் ஐஸ்கட்டி போல் உருகி விடும்.
டிப் 05:-
உணவுமுறையில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்.எண்ணெய் அதிகம் சேர்க்காத உணவுகளால் உடலில் அதிகளவு கொழுப்பு தேங்காமல் இருக்கும்.தானியங்களை முளைக்கட்டி சாப்பிட்டு வந்தால் உடல் எடை பிட்டாக இருக்கும்.
டிப் 06:-
தேயிலை டீ,காபிக்கு பதில் ஹெல்த் மிக்ஸ் பவுடரில் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.டீ,காபி,ப்ளாக் காபி போன்ற பானங்களில் மிகவும் குறைவான அளவு சர்க்கரை சேர்த்து குடிக்க பழகுங்கள்.
டிப் 07:-
தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி,15 நிமிடம் நடைப்பயிற்சி,15 நிமிடம் யோகா செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.
டிப் 08:-
உப்பு நிறைந்த உணவு,எண்ணெய் உணவு,வறுத்த உணவு,கொழுப்பு நிறைந்த இறைச்சி உண்பதை தவிர்த்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.