டயட் இன்றி உடல் எடையை குறைக்கும் வித்தை!! தினமும் இதை செய்தால் வாரத்திற்கு 3 கிலோ எடை குறைவது கன்பார்ம்!!

 

உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்தால் அப்பத்தான நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.மாரடைப்பு,பக்கவாதம்,மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் உடல் பருமன்.

நமது உடலில் வயிறு,கை,தொடை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கெட்ட கொழுப்புகள் சேர்க்கிறது.இதை ஆரோக்கியமான முறையில் கரைக்க விரும்புபவர்களுக்கு க்ரீன் டீ நல்ல சாய்ஸாக இருக்கும்.

க்ரீன் டீ குடிப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இளமை பொலிவுடன் இருக்க உதவுகிறது.தினமும் ஒரு கிளாஸ் க்ரீன் குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.இதயம் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

பச்சை தேயிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)புரதம்
2)வைட்டமின் பி
3)தியாமின்
4)ரிபோஃப்ளேவின்

க்ரீன் டீ தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

1)க்ரீன் டீ பேக்
2)சூடான நீர்

செய்முறை விளக்கம்:

முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதை ஒரு டம்ளரில் ஊற்றி ஒரு க்ரீன் டீ பேக் போட்டு சூடாக குடிக்க வேண்டும்.இப்படி காலை மாலை என இரண்டு நேரங்களிலும் க்ரீன் டீ குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு மளமளவென குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்கும் மற்றொரு பானம்

தேவையான பொருட்கள்:

1)எலுமிச்சை புல்
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:

லெமன் கிராஸ் என்று அழைக்கப்படும் எலுமிச்சை புல் சிறிதளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து சுத்தம் செய்த லெமன் கிராஸை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.