கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!!

Photo of author

By Parthipan K

 

கொள்ளுப்பயறு லட்டு தினமும் சாப்பிட்டால் எடை குறையும்!!

“இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழி உண்டு.அதற்கேற்றது போல் உடல் எடையைக் குறைப்பதில் கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கொள்ளு பருப்பை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்துக் கொடுப்பார்கள். மறுநாள் சளி இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட கொள்ளு பருப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வயது வித்தியாசம் இன்றி எடுத்துக் கொள்ளலாம்.இதைக்
கொள்ளுப் பருப்பு அல்லது குதிரைப் பருப்பு என்று  அழைக்கப்படும்.

கொள்ளைக் கடினமான வேலைகளைச் செய்யும் குதிரைக்கு நம் முன்னோர்கள் அளித்து வந்தனர்.அப்படிபட்ட சக்தியைக் கொண்ட கொள்ளுப் பருப்பை பலரும் தங்களுடைய உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை.ஆனால் கொள்ளு பருப்பில் உடலில் இருக்கும் கொழுப்பு அல்லது சதையைக் குறைக்க உதவும். அத்தோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கவும், எலும்புகளுக்கும்,நரம்புகளுக்கும் கொள்ளுப் பருப்பு மிகவும் உதவும்.

அதேபோல் உடல் எடையைக் குறைக்க கொள்ளு பல விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அடிக்கடி உணவில் கொள்ளுப் பருப்பை சேர்த்துக் கொள்ளவும். இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கைப்பிடி கொள்ளை தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதனை சாப்பிடவும். அதேபோல் கொள்ளை அரைத்து பொடி செய்து ரசம் வைத்து சாப்பிட்டால்  உடல் எடையைக் குறைக்கும்.