நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!  

Photo of author

By Parthipan K

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!  

Parthipan K

Updated on:

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!

 

சனிக்கிழமையில் பிறந்தவர்களை பலாப்பழம் போல் கருதுகின்றார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகுவார்கள் மற்றும் சமயோகித புத்தி கொண்டவர்களாக விளங்குவார்கள். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை சுலபமாக சரி செய்து விடுவார்கள். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு இருட்டில் இருப்பதற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்போதும் தனிமையே விரும்புவார்கள். மேலும் கடின உழைப்பாளியாகவும் காணப்படுவார்கள் ஆனால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவர்களுக்கு எப்போதும்  கிடைக்காது.

மேலும் இவர்கள் அநீதியை கண்டால் தட்டிக் கேட்பார்கள் நீதி நேர்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். குறிப்பாக சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பேசும்போது அதிக கவனம் தேவைப்படுகிறது. எதார்த்தமாக கூறும் சொல் கூட எதிர்மறையாக மற்றவர்களுக்கு காணப்படும். சனி கிழமையில் பிறந்தவர்கள் கல்வி, அரசியல், கலைத்துறை போன்ற துறைகளில் முதன்மை வாய்ந்தவராக திகழ்வார்கள். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அவ்வப்போது வந்து செல்லும்.

இவர்களின் ராசியான நிறம் நீளம்,கருப்பு முக்கிய நேரங்களில் இந்த கலரை அணிந்து சென்றால்  நிச்சியம் வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சனிக்கிழமை பிறந்தவர்கள் செல்ல பிராணிகள் வளர்ப்பதில்ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் கருப்பு கலர் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். சனி கிழமையில் பிறந்தவர்கள் சனிக்கிழமை அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்ல யனை தரும் மேலும் குலதெய்வ வழிபாடு கண்டிப்பாக செய்ய வேண்டும். மேலும் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்காக ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்கு உதவி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறது ஐதீகம்.