முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்!  

0
90

முகமே தெரியாமல் வீடியோ கால் பேசலாமா? வாட்ஸ் ஆப்பில் இந்த புதிய அப்டேட்டை பாருங்கள்!

ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தும் ஆப்-ல் தினம் தினம் புதுப்புது அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் நடைமுறையில் இருப்பது தான் எமோஜிக்களும், ஸ்டிக்கர்களும். வார்த்தைகள் எதுவும் பயன்படுத்த வேண்டாம். இந்த எமோஜிகளும், ஸ்டிக்கர்களுமே சில விஷயங்களைப் புரிய வைப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் மனிதர்களின் உணர்வுகளைச் சொற்களைப் பயன்படுத்தாமல் எளிமையாக உணர்த்திவிடுகிறது. இவை சமூக வலைதளத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன.சமூக வலைத்தளங்களில் ஒரு முக்கிய தகவல் பரிமாற்றக் கருவியாக இருப்பது இந்த எமோஜி. மேலும் எமோஜி மற்றும் ஸ்டிக்கர் வரிசையில் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது அவதார் . அவதார் என்றால் ஒரு உருவத்தை வரைகலை அனிமேஷன் வடிவில் காண்பிப்பது. சமீபத்தில்தான் மார்க் சக்கர்பர்க்கின் மெட்டா, ‘அவதார்’ என்கிற புதிய அப்டேட்டை ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இன்ஸ்டிராகிராமில் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் இப்பொழுது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டுவரவுள்ளது மெட்டா. அந்த அப்டேட் என்னவென்றால் வீடியோ காலில் முகத்தைக் காட்ட விரும்பாதவர்கள் இந்த அவதார் ஆப்சனை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நீங்கள் அவதார் ஆப்சனை இயக்கினால் போதும் உங்கள் செல்போன் கேமரா மூலம் உங்கள் முகத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற அவதார் எமோஜியை ரீப்ளேஸ் செய்துவிடும். இதுமட்டுமின்றி உங்கள் முக அசைவையும் அப்படியே பிரதிபலிக்கும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட இருக்கிறது.இதன் மூலம் வீடியோ காலில் அவ்வப்போது புதிய அப்டேட்களைக் கொண்டு வரும் கூகுள், ஜூம் போன்ற செயலிகளுடன் போட்டியிட இருக்கிறது வாட்ஸ்அப். ஆப்பிள் செயலியில் மெமோஜி எப்படிச் செயல்படுகிறதோ அதே மாதிரி வாட்ஸ்அப்பிலும் இந்த அவதாரைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

 

இதனை WAbetainfo என்ற குழு தெரிவித்துள்ளது. இது போன்ற சிறப்பம்சம் ஏற்கெனவே ‘வாட்ஸ்அப் Beta’ என்கிற ஆண்ட்ராய்டு வெர்சனில் உள்ளது. இன்னும் சில தினங்களில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்தச் சிறப்பம்சம் கிடைக்கும் என்பதைத் தெரிவித்திருக்கிறது. மேலும் வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து மற்றவர்களுக்குத் தெரியாமல் வெளியேறும் ஆப்ஷனையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது மெட்டா. வாட்ஸ்அப் கொண்டுவரப் போகும் இந்தப் புதிய அப்டேட்டுகள் அனைவர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியிலும் ஒரு பக்கம் இவ்வாறு புதிய புதிய அப்டேட் வந்தால் என்னவாகப் போகும் என்று பயத்திலும் இருந்து வருகின்றனர்

 

 

author avatar
Parthipan K