2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வரை சந்திப்பாரா?

0
132

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இதன் மூலமாக பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது ஆகவே திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை கண்டு அஞ்சி நடுங்கினர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் நரேந்திர மோடியிடம் தாங்கள் அரசியலை விட்டு எப்போது விலகுகிறீர்கள் என்று நேரடியாகவே கேட்டு விட்டார்.

அந்த அளவுக்கு தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் அசுர வளர்ச்சியை கண்டிருந்தனர். அதோடு பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச அளவிலும் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்ப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் பாஜகவை எப்படி வீழ்த்துவது என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர் அதில் முதல் சாய்ஸாக இருந்தவர் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

தமிழகத்தில் எப்படி ஜெயலலிதா அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்தாரோ அதேபோல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மாபெரும் அரசியல் சக்தியாக திகழ்கிறார்.

ஆகவே எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மம்தா பானர்ஜி அவர்களை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற விவாதமும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

ஆனால் மற்றொருபுறமோ பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அவர்களை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்ற கருத்தும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் இரண்டு நாள் பயணமாக தலைநகர் சென்னைக்கு வருகை தருகிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதோடு அவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னைக்கு வர உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தற்காலிக ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா நாரை கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகிறார். இன்று மாலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை அவர் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் உத்திகள் தொடர்பாக அப்போது அவர் விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றன. இல. கணேசன் சகோதரர் பிறந்தநாள் விழாவில் மேலும் பல தமிழக தலைவர்களை சந்தித்து அவர் விவாதிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

Previous articleஹோட்டல் வீடியோ சர்ச்சை விவகாரம்… பெருந்தன்மையான முடிவை எடுத்த கோலி!
Next article“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு… ஆனா நாங்க அதுக்கு வர்ல” – பங்களாதேஷ் கேப்டன்