என்ன கொடும சார்! துணை நடிகர் செய்யும் வேலையா இது?

0
130
What a pity, sir! Is this the work that the supporting actor does?
What a pity, sir! Is this the work that the supporting actor does?

என்ன கொடும சார்! துணை நடிகர் செய்யும் வேலையா இது?

மதுரையை அடுத்த சோழவந்தான் முள்ளிப்பள்ளம் பகுதியில் காமராஜ் தெருவை சேர்ந்தவர் பக்தன்.இவருக்கு நாச்சியப்பன் என்று இன்னொரு பெயரும் உண்டு.இவருடைய வயது 49. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் துணை நடிகராக நடித்துள்ளார். எலி உள்ளிட்ட சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.ஒரு நாள் காற்று வாங்க வெளியில் சென்றுள்ளார்.அப்போது  சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை அழைத்து சாக்லேட் உடன் பலகாரம் வாங்கி கொடுத்து  அச்சிறுமியை தனியாக அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இது கடந்த 2017 ஆம் ஆண்டில் நடந்ததாக கூறுகின்றனர்.இவ்வாறு அந்த சிறுமியிடம் தாகத முறையில் நடந்ததை தென் கரையை சேர்ந்த டிரைசைக்கிள் டிரைவர் மணிகண்டன் என்பவர் பார்த்துள்ளார்.அவரைப்போல யாவரும் அந்த சிறுமியிடம் தாகத முறையில் நடந்துள்ளார்.சிறுமி வர மறுத்தால்,நீ அவருடன் சென்றதை சொல்லிவிடுவேன் என கூறி அச்சிறுமியை மிரட்டியுள்ளார்.தன் ஆசைக்கு இணங்குமாறு தொடர்ந்து  தொல்லை செய்து கொண்டிருந்தார்.

தொல்லை தாங்க முடியாமல் சிறுமி புகார் அளித்துள்ளார்.இது குறித்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தது விசாரித்து வந்தனர் .புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸ் வழக்கு பதிவு செய்து பக்தன் என்கிற நாச்சியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர் . மேலும் இந்த வழக்கு விசாரணையின் படி மதுரை மாவட்ட போக்சோ நீதி மன்றத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அரசு தரப்பில் வக்கில் ஜான்சி என்பவர் வாதாடினார்.மேற்கண்ட விசாரணையின் படி இறுதியில் குற்றம் திணிக்கப்பட்ட நாச்சியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார். இதனால் அப்பகுதி மக்களிடையே  பெரும் சலசப்பை ஏற்படுத்தியது.

Previous articleதிடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! 
Next articleதமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா?