என்ன ஒரு தத்ரூபமான நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை!
அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டுமெனில் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது பரபரப்பாக தமிழ்நாடு முழுவதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே பேச்சு அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை தான். அவரின் கைது பற்றி அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பண மோசடி செய்ததாக கூறி அமலாக்கதுறையினர் நேற்றுக் காலை அவரை கைது செய்தனர். இதையடுத்து திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதாக கூறி அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் மருத்துவமனைக்கு நேரில் வந்த சென்னை முதன்மை அமர்வு மன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் கைது நடவடிக்கையை பலரும் விமர்சித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதைப் பற்றி கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
அதிமுக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அவரின் மீது புகார் வந்தவுடன் உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து தூக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இப்போதைய திமுக முதல்வரோ அவரின் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கி தூக்கி வைத்து கொண்டாடினார்.
அதுவும் கைதாகும் போது நெஞ்சுவலி நடிப்பிற்கு அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கார் அவார்டை தூக்கி செந்தில் பாலாஜிக்கே கொடுக்க வேண்டும். இதய நாளத்தில் 30% அடைப்பிற்க்கே ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உலகத்தில் முதன்முறையாக இங்கே தான் என அவர் கிண்டலடித்தார்.