உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது!

Photo of author

By Parthipan K

உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது!

Parthipan K

What a soldier did to save life! Arrested under the POCSO Act!

உயிரை காக்கும் ராணுவ வீரர் செய்த காரியம்! போக்சோ சட்டத்தில் கைது!

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்(21).இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். இந்நிலையில் லோகேஷ் விடுமுறைக்காக அவருடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.அவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். அந்த பழக்கத்தின் மூலம் அந்த சிறுமியை லோகேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அதனை அந்த சிறுமி அவருடைய பெற்றோரிடம் கூறினார்.

அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார்யை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.அவர் இதுபற்றி ராணுவ அதிகாரிகளிடம் புகார் செய்தார்கள்.

இதனைத்தொடர்ந்து ராணுவத்தில் இருந்து லோகேஷ் நீக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து அவருடைய சொந்த ஊருக்கு வந்த லோகேசை போக்சோ சட்டத்தின் கீழ் பவானி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.அதன்பிறகு அவரை ஈரோடு கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.