தலைவர்170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள காரியம்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

0
106
#image_title

தலைவர்170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள காரியம்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடக்கவிருக்கும் தலைவர் 170 திரைப்படத்திற்காக புதிதாக ஒரு செயலை செய்யவுள்ளார் என்று வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக 170வது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் இயக்கவுள்ளார். மேலும் இயக்குநரும் அவருடைய மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தலைவர்171 திரைப்படத்தில் அதாவது 171வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். மேலும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 171 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. அனிருத் இந்த தியைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் டிஜி ஞானவேல் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் குறித்த ஒரு தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அதாவது தலைவர் 170 திரைப்படம் என்கவுண்டர் பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றியும் பேசும் படமாக உருவாகவுள்ளதாகவும் இந்த திரைப்படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் இந்த திரைப்படம் கன்னியாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.

தலைவர் 170 திரைப்படம் கன்னியாகுமரியை வைத்து உருவாக இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படம் முழுக்க கன்னியாகுமரி பாஷையில் பேசவுள்ளார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பலவிதமான பாஷைகளை தனது ஸ்டைலில் பலவிதமான மாடுலேசன்களில் பேசியுள்ளார். ஆனாலும் ஒரே விதமான தமிழ் பாஷையிலேயே இருந்தது. இந்நிலையில் வேகமாக வசனங்களை பேசும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் முதல் முறையாக கன்னியாகுமரி பாஷை பேசவுள்ளார். இதனால் கன்னியாகுமரி பாஷையை தனது ஸ்டைலில் நடிகர். ரஜினிகாந்த் அவர்கள் எவ்வாறு பேசுவார் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Previous articleஊரக மற்றும் ஊராட்சி குறைகளை உடனுக்குடன் கேட்டறியும்”ஊராட்சி மணி”சேவை மையம் துவக்கம்!!
Next articleசர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்!