சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்!

0
27
#image_title

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் “இந்தியா” என்ற வார்த்தையை ஒரு இடத்தில் கூட குறிப்பிடாத பிரதமர்!

நாட்டின் தலைநகர் புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்,புகழ்பெற்ற நீதி அரசர்கள்,சட்ட வல்லுநர்கள் மற்றும் உலக நாடுகளின் சட்டத்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

‘நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்‘ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.இது தான் இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு என்பது தனி சிறப்பு.இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் நீதிபதிகள்,சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் பயனுள்ள,சிறப்பான கலந்துரையாடலை நிகழ்த்த இருக்கின்றனர்.

இந்த மாநாட்டின் முக்கிய அம்சம் அனுபவம் பெற்ற நீதிபதிகள் சட்டம், எல்லை தாண்டிய வழக்குகளில் உள்ள சவால்கள் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்வதால் இளம் வழக்கறிஞர்களுக்கு அவை உத்வேகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இதில் தொடக்க உரையை நிகழ்த்திய பிரதமர் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.அதில் மோடி மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் குறித்தும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை பாரத் நிகழ்த்தி வருவது மற்றும் உலக பார்வை தற்பொழுது பார்த் மீது தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் சில தினங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.இந்த சட்டம் பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்தை நிலை நாட்டுவதோடு நாடு முன்னேற்ற பாதையை நோக்கி செல்வதில் பெண்களின் பங்கு மகத்தானதாக இருக்கும்.நமது நாட்டு சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி,அம்பேத்கர்,திலகர் உள்ளிட்ட பல வழக்கறிஞர் சுயநலமின்றி பாடுபட்டனர் என்று பாராட்டு தெரிவித்தார்.

மேலும் பாரத உச்ச நீதிமன்றம் எந்த சமரசமும் இன்றி சிறப்பாக பணியாற்றி வருகிறது என்று தெரிவித்த அவர் மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கி வருவதை பாராட்டினார்.அத்தோடு இயன்ற அளவு எளிதாகவும்,பாரத் மொழிகளில் சட்டங்களை வரையறுக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.இந்த மாநாடு முழுவதும் தனது உரையில் ஒரு இடத்தில் கூட ‘இந்தியா’ என்ற வார்த்தையை உபயோகிக்காத பிரதமர் இந்தியாவிற்கு என்ற வார்த்தைக்கு பதில் “பாரத்” என்று குறிப்பிட்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றது.