இந்த சிறு வயதிலே என்னம்மா சாதனை!.. பூரிக்க வைக்கும் கம்பம் அரசு பள்ளி மாணவி!!
கம்பம் முகையத்தின் ஆண்டவர் புறம் நகராட்சி அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்ப்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள்.இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சமீகா பெரிய சாதனை படைத்துள்ளார்.
கம்பம் 11 வது வார்டில் இயங்கி வரும் முகையத்தின் ஆண்டவர் புறம் நகராட்சி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சமீரா தனது 6 வயதிலிருந்தே கராத்தே கற்று வருகின்றார். கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியிலும் பல பரிசுகளை திரட்டி தட்டிச் செல்கின்றவர் இந்த மாணவி.
அதனையடுத்து தஞ்சாவூர் மற்றும் கொடைக்கானலில் நடைபெற்ற கராத்தே போட்டியில் போட்டியிட்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.அதேபோல் தேனியில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று மாநில அளவில் இந்த சிறுமி முதலிடம் பெற்றுள்ளார்.
அதனையடுத்து மதுரையில் சிலம்பம் மற்றும் கராத்தாவில் பங்கு பெற்று இரண்டிலும் முதலிடத்தை பிடித்துள்ள மாணவி சமிக்க அவர்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் கம்பம் அந்த பள்ளிக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது அவருடன் நகராட்சி முகையத்தின் ஆண்டவர்புரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி ஆகியோர் பங்கேற்று அந்த சிறுமிக்கு பரிசுகளை கொடுத்து பாராட்டியுள்ளார்கள்.