Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா?

Photo of author

By Parthipan K

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா?

கனவு காண்பது என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். இருப்பினும் நாம் கண்ட கனவினால் நமக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா போன்ற உங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும்,

ஆலயத்தின் தலைவாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதைக் குறிக்கும்.

ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

தெய்வத்துடன் பேசுவது போல் கனவு காண்பது சுபம். நன்மை விரைவில் இல்லம் தேடி வரும் என்பதைக் குறிக்கிறது.

தெப்பத்தை கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.

கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் பாவங்கள் நீங்கி விட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு வந்தால், லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்கியங்களை பெற்று சுகமாக வாழ்வீர்கள்.

இடாகினி(காளி) தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.