மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் இத்தனை பயன்களா?
அனைத்து பெண்களும் மாதந்தோறும் சந்திக்க இருக்கும் பிரச்சனைதான் மாதவிடாய். இந்த மாதவிடாயானது பொதுவாக 1 முதல் 5 நாட்களுக்கும் இருக்கும். பெண்களின் உடல் தோற்றத்திற்கு ஏற்ப நாட்கள் வேறுபடும். இந்த மாதவிடாய் காலத்தில் பலர் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அதிகப்படியாக இருக்கும். சிலருக்கு எரிச்சலூட்டும் விதமாகவே இருப்பார். பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் பொருத்து அதுவும் வேறுபடும்.
அவ்வாறு மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் பல நன்மைகள் உண்டாகும்.மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு உடலில் உள்ள அழுக்குகள் தேவையற்ற ரத்தங்களாக வெளியேறும்.கர்ப்பப் பையானது அதிகளவு சுருக்கம் அடைந்து தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றுவதனால் பெண்களுக்கும் அதிகளவு உடல் சோர்வு ஏற்படுகிறது.
அதனால் தான் பெண்களுக்கு இடுப்பு வலி ,தலை வலி ,கை கால் வலி ஏற்படுகிறது.ஆனால் மாதவிடாய் காலத்தின் போது பெண்கள் உடலுறவு வைத்துக் கொண்டால் இந்த வலிகள் படிப்படியாக குறையும். ஏனென்றால் உடலுறவு வைத்துக் கொள்வதால் ரத்தப்போக்கு அதிகமாக காணப்படும். அதனால் பெண்களின் உடலில் இருக்கும் அழுக்குகள் உடனடியாக வெளியே வருவதினால் பெண்களுக்கு இந்த வலிகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.அதேபோல மாதவிடாயின் போது உடலுறவு வைத்துக் கொள்வதினால் தீமைகளும் அதிக அளவில் உள்ளது.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால் பெண்களின் கர்ப்பப்பை வாயானது இருக்கும் அளவைவிட சற்று விரி வடையும்.அதனால் தேவையற்ற நுண்கிருமிகள் அவர்களின் உடலுக்கு எளிமையாக செல்வதில் அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் அவர்கள் தேவையற்ற உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.ஒரு கணவன் மனைவி இடையே உள்ள உறவை காட்டிலும் மனம் பொருத்தமே அவர்கள் வாழ்க்கையை எடுத்து செல்லும்.
அதனால் சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது உடலுறவு வைத்துக் கொள்வதில் நாட்டம் இருக்காது. அவ்வாறு இருக்கும் பெண்களை நன்றாக ஓய்வெடுக்க அனுமதி அளிக்க வேண்டும். அவர்களுக்கான நாளாக அதை விட்டுவிட வேண்டும்.மிகவும் பாதுகாப்பான முறையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்ள வேண்டும்.