ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்!
கொரோனா தொடரானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. டெல்டா டெல்டா பிளஸ் போன்றவை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அத்தோடு இந்த புது வருடம் போல இருக்காது என மக்கள் கண்ட கனவெல்லாம் முதல் 5 நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. கொரனோ தொற்றின் அடுத்த உரு மாற்றம்தான் ஒமைக்ரான். தற்போது இந்த தோற்றமானது இந்த தொற்றானது அனைத்து நாட்டிலும் வேகமெடுத்து பரவி வருகிறது.
அந்த வரிசையில் நமது இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதனால் நமது மத்திய அரசு மாநிலத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளும் படி ஆணை பிறப்பித்தது. அதன்படி அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே காணப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் அவர்கள் நேற்று மருத்துவக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஆலோசனை செய்தனர்.
பின்பு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியது,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று தெரிவித்தார். வெள்ளி, சனி ,ஞாயிறு ஆகிய தினங்களில் ஆலயங்களில் வழிபடுவதற்கும் தடை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். அதேபோல புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை வந்ததையொட்டியும் கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமை வந்ததையொட்டியும் இந்த தடுப்பூசி முகாம்கள் அதற்கு முந்தைய நாளே திட்டமிட்டு நடைபெற்றது. தற்பொழுது ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் என்று கூறினார்.