உடலில் எந்த ஊட்டச்சத்து குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

Photo of author

By Divya

உடலில் எந்த ஊட்டச்சத்து குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

Divya

நமது உடலில் ஊட்டச்சத்து குறைந்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நமது உடலுக்கு புரதம்,கால்சியம்,வைட்டமின்,தாதுக்கள் அனைத்தும் அவசியம் தேவைப்படுகிறது.இதில் ஒன்று குறைந்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

உடலில் ஊட்டச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் வளர்சிதை குறைபாடு ஏற்படும்.உடல் எடை மற்றும் உடல் உயரத்தில் மாற்றம் ஏற்படும்.

2)ஊட்டச்சத்து குறைந்தால் உடல் பலவீனப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.ஊட்டச்சத்து குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

3)காய்ச்சல்,இருமல்,சளி போன்ற பாதிப்புகளை அதிகமாக சந்திக்க நேரிடும்.எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகளை அதிகமாக சந்திக்க நேரிடும்.

இரும்புச்சத்து குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

பலவீன தசை உணர்வு
முடி உதிர்தல்
இரத்த சோகை
மூளை நரம்பு சேதம்
தலைச்சுற்றல்
தலைவலி
உடல் பலவீனம்

கால்சியம் குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

எலும்பு வலி
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
உடல் தசை பலவீனம்
எலும்பு முறிவு

வைட்டமின் குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை
உடல் தசை தளர்தல்
எலும்பு பலவீனம்
எலும்பு வளர்ச்சியில் பிரச்சனை
உதடு வெடிப்பு

புரதம் குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

வளர்சிதை மாற்றம்
மராஸ்மஸ்
உடல் சோர்வு
எலும்பு குறைபாடு

அயோடின் சத்து குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள்:

உடல் பலவீனம்
தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை
சுவாசப் பிரச்சனை

ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க வழிகள்:

பழங்கள,காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை சாப்பிட வேண்டும்.

முட்டை,அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும்.தினமும் ஒரு கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.பால்,பால் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை,உப்பு,கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.