Youtube கொண்டு வந்த புது விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் இதனால் பாதிக்கப்படுவார்கள்?

0
41
What are the new rules introduced by YouTube? Who will be affected by this?
What are the new rules introduced by YouTube? Who will be affected by this?

இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நேரத்தில் நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது பலர் Youtube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை விளையாட்டுக்காக( ஒரு ஜாலிக்காக) பதிவு செய்து வெளியிட்டு வந்தனர். நாளடைவில் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி Youtube, Facebook போன்ற வலைத்தளங்கள் மக்களின் வீடியோவை அங்கீகரித்து அவர்களுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் நிறைய பேர் பயனடைந்தனர். பலர் தங்கள் அன்றாட வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக Youtube ல் சம்பாதிக்க இறங்கிவிட்டனர். பலர் லட்சம் முதல் கோடிகளில் சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டனர். அதாவது தாங்கள் இத்தனை வருடங்களாக செய்துவந்த தொழில் மற்றும் வேலைகளை விட்டுவிட்டு முழு நேரமாக Youtube ல் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில் பல புது விதிமுறைகளை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த புது விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனி பணம் கொடுக்க முடியாது என்று Youtube அறிவித்துள்ளது. அந்த விதிமுறைகள் பின்வருமாறு : மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்பவர்களுக்கு இனி பணம் கிடைக்காது.

ஒரே மாதிரியான விடீயோக்களை பதிவேற்றம் செய்தால் பணம் கிடைக்காது. செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ வெளியிடுபவர்களுக்கு இனி பணம் கிடைக்காது. மிகக்குறைந்த முயற்சியில் உருவாக்கப்படும் வீடியோக்கள், அடுத்தவர்களின் வீடீயோவை காப்பி அடித்து சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு வீடியோ வெளியிடுவது, தரம் இல்லாத வீடியோக்கள், டெம்ப்ளேட் அடிப்படையில் உருவாக்கப்படும் வீடியோக்கள் வெளியிடுபவர்களுக்கு இனி யூடியூபில் இருந்து பணம் கிடைக்காது என்கிற தகவல்களை Youtube அண்மையில் வெளியிட்டுள்ளது. இதனால் Youtube தான் கதி என்று இருந்தவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Previous articleதிமுக கூட்டணியில் இருந்து விலக துடிக்கும் காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணியா?