வெயில் கால நோய்களில் ஆபத்தானவை என்றால் ஹீட் ஸ்டோக்கை சொல்லலாம்.உடல் சூடு அதிகமானால் இந்த ஹீட் ஸ்டோக் பாதிப்பு ஏற்படும்.ஹீட் ஸ்டோக்,ஐ ஸ்டோக் போன்ற பாதிப்புகள் அதிக வெப்ப அலைகளால் உருவாகிறது.
தற்பொழுது பங்குனி வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இன்னும் சில தினங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி எடுக்க போகிறது.இதனால் அனல் காற்று வீசக் கூடும்.அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்படுகிறது.இதன் காரணமாக சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.
உடல் சூடு அதிகமானால் நீர்ச்சத்து குறைந்து ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும்.இந்த ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டால் வாந்தி,மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் வலி ஏற்படும்.ஹீட் ஸ்ட்ரோக்கை அலட்சியமாக கருதி உரிய சிகிச்சை எடுக்கத் தவறினால் உயிரே போய்விடும்.எனவே இந்த வெயில் காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் உடல் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக் எதனால் வருகிறது?
**கடுமையான வெயில் தாக்கத்தால் உடல் சூடாகி ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுகிறது.
**உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதாவது அதிக நீரிழப்பு ஏற்பட்டால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும்.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு வராமல் இருக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்:
**மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
**இளநீர்,நுங்கு,வெள்ளரி ஜூஸ்,மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த இயற்கை பானங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
**வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.முடிந்தவரை வெயில் தாக்கம் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
**தினமும் இருமுறை குளிப்பதால் உடல் சூடாகாமல் இருக்கும்.டீ,காபி போன்ற சூடான பானங்களை அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும்.