ஹரியானாவில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகம் ஒன்று படிக்கக்கூடிய மாணவன் தன்னுடைய கல்லூரி விடுதிக்குள் தன்னுடைய காதலியை அழைத்து செல்ல முயன்ற பொழுது காவலாளிகளிடம் கையும் காலும் ஆக சிக்கியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஓபி ஜிண்டால் யூனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கக்கூடிய தொழிலதிபர்களின் மகன்களும் படித்து வருகின்றனர். அந்த அளவிற்கு மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருக்கக்கூடிய இந்த கல்லூரியில் தன்னுடைய காதலியை ட்ராலியில் வைத்து ஒரு மாணவன் தன் விடுதிக்கு அழைத்து சென்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுமுறை நாட்களை கழிப்பதற்காக தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வந்த மாணவன் வரும்பொழுது மிகப்பெரிய அளவில் ட்ராலி ஒன்றை எடுத்து வந்திருக்கிறார். ட்ராலியை பார்த்தவுடன் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் இதில் என்ன இருக்கிறது என கேள்வி எழுப்ப பலவாறு பதில் கூற முற்பட்டு ஒரு கட்டத்தில் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக மாணவர் நின்று இருக்கிறார். அப்பொழுது திடீரென அந்த ட்ராலி அசைய தொடங்கியதோடு அதனுள் இருந்து முணுமுணுப்பு சத்தமும் வெளிவந்திருக்கிறது.
இதனை கண்டு காவலாளிகள் அதிர்ச்சி அடைந்ததோடு மாணவன் யாரோ ஒருவரை கொன்று ட்ராலியில் எடுத்து வந்திருப்பானோ என்பது போன்ற சந்தேகங்களும் எழுந்திருக்கிறது. திறந்து பார்த்த பின்பு தான் அதில் ஒரு பெண் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை குறித்து விசாரிக்கும் பொழுது அந்தப் பெண் தன்னுடைய காதலி என்றும் விடுதியின் அறைக்கு சென்று விட்டால் இருவரும் சில நாட்களுக்கு ஒன்றாக இருக்கலாம் என்பதற்காக இது போன்ற ஒரு நாடகம் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அந்தப் பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எந்த கல்லூரியில் படிக்கிறார் என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.