பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை சந்திக்கின்றனர்.இந்த சர்க்கரை பாதிப்பை ஆரம்ப நிலையில் கவனித்து உரிய சிகிச்சை அளித்துக் கொள்ள தவிறினால் தாய் மட்டுமின்றி கருவில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும்.
உங்களுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால் பிறக்கும் குழந்தையின் உடல் எடை அதிகமாகி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கர்ப்ப கால நீரிழிவு நோயால் தாய்க்கு கால்சியம் அளவு குறையத் தொடங்கும்.கருவில் வளரும் குழந்தை இருதயம் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.
கர்ப்பகால சர்க்கரையை கண்டறிய வழிகள்:
நீங்கள் கர்ப்பம் தரித்த பின்னர் மருத்துவரை அணுகும் பொழுது நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கர்ப்பகால நீரிழிவு நோய் கட்டுப்பட உட்கொள்ள வேண்டிய உணவுகள்:
1)பாலில் பாதாம் பருப்பு பொடி கலந்து குடிக்க வேண்டும்.இட்லி,தோசை,சப்பாத்தி போன்ற உணவுகளுடன் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2)காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப் தினமும் ஒரு கப் குடிக்க வேண்டும்.தானியங்களை முளைகட்ட வைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
3)மதிய நேரத்தில் ஒரு கிளாஸ் மோர் பருக வேண்டும்.வெந்தய கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4)பச்சை கொய்யாவை உட்கொள்ள வேண்டும்.சர்க்கரை கலந்த பழச்சாறு பருகுவதை தவிர்க்க வேண்டும்.
5)ஐஸ்க்ரீம்,பேரிச்சம் பழம்,வெல்லம்,கருப்பட்டி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.அதேபோல் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அவ்வப்போது நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.வெள்ளை அரிசி உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.