முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

0
166

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

பெண்கள் எப்பொழுதும் எண்ணுவது நம்முடைய முகம் சிகப்பாகவும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

அதற்கு முதலில் சர்க்கரை சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் அவற்றை நம் முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

அதன் பிறகு இரண்டாவதாக தேங்காய் தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும் தினமும் இரண்டு முறை அதனை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும் அதனை எடுத்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் ,கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவை மறையும்.

மேலும் நாம் தண்ணீர் அதிக அளவு குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவு பெறும். இரவு தூங்க செல்லும் முன்பு சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைக்க வேண்டும் காலையில் அதில் சிறிதளவு குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து அதனை அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால் சருமம் மென்மையான தோற்றத்தை பெறும்.

 

Previous articleஉங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 
Next articleடி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவுகள்!