+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த 8 ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று இருந்தது.
அதே போல் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இருந்தது. இந்நிலையில் மாணவர்களை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும், அடுத்து என்ன படிப்பது என்ற தெளிவு மற்றும் அதற்கான சூழ்நிலை இல்லாத மாணவர்களுக்கும், ஆலோசனைகள் வழங்க தமிழக அரசு உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது.
இந்த ஆலோசனை மையத்தை 14417 என்ற எண்ணில் அழைக்கலாம். இந்த ஆலோசனை மையம் மூலமாக தங்களது உயர் கல்வி குறித்த சந்தேகங்களை மாணவர்கள் தெளிவு படுத்தி கொள்ளலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் இந்த மையம் சிறந்த ஆலோசனைகளை வழங்கிறது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற ஜூன் 19ம் துணைத்தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்கி, நடைபெறும் துணைத்தேர்வு பற்றிய விளக்கங்கள் அளித்து, மாணவர்கள் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற இந்த மையம் ஆலோசனை வழங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.