உங்களில் சிலருக்கு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தொண்டையில் உறுத்தல் காரணங்கள்:
**சளி மற்றும் இருமல்
**ஒவ்வாமை
**தொண்டை வறட்சி
**இரைப்பை குழாயில் எரிச்சல்
**பாக்டீரியா தொற்று
தொண்டை உறுத்தல் குணமாக வீட்டு வைத்தியங்கள்:
தீர்வு 01:
பால்
மஞ்சள் தூள்
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த மஞ்சள் பானத்தை கிளாஸில் ஊற்றி இரவு நேரத்தில் குடித்தால் தொண்டையில் உறுத்தல் ஏற்படுவது குணமாகும்.
தீர்வு 02:
உலர் பழம்
தண்ணீர்
திராட்சை,அத்தி போன்ற உலர் பழங்களை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கிண்ணத்தில் இதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிட வேண்டும்.
இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் தண்ணீரை குடித்துவிட்டு உலர் பழத்தை சாப்பிட வேண்டும்.இந்த உலர் பானம் தொண்டையில் உறுத்தல் ஏற்படுவதை குறைக்கிறது.
தீர்வு 03:
உப்பு
தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலக்கி தொண்டை பகுதியில் படும்படி வாய் கொப்பளத்தால் உறுத்தல் ஏற்படாமல் இருக்கும்.
தீர்வு 04:
தேன்
தண்ணீர்
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பானத்தை இரவு நேரத்தில் குடித்தால் தொண்டை உறுத்தல் குணமாகும்.
தீர்வு 05:
தண்ணீர்
எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்துவிட வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி பருகினால் தொண்டை உறுத்தல் சரியாகும்.